ஹா..ஹா...ஹாஸ்யம்
சிரிப்பு மன ஆரோக்கியத்துக்கு மருந்து. மன ஆரோக்கியம் இருந்தால், உடல் ஆரோக்கியம் தானே வரும்.
Saturday, 4 February 2012
Monday, 23 January 2012
செந்திலும் ஐயனாரும்
அண்ணே பாருங்க நான் எவ்வளவு சீப்பா சாமானெல்லாம் வாங்கி வந்திருக்கேன்னு
அடே என் செல்லம் எங்கேடா கத்துக்கிட்டே
எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த லெசன்ணே
என்னமா ஜொலிக்குதுடா உன் மூளை....
சரி என்ன வாங்கினே எவ்வள்வுக்கு வாங்கினே காட்டு பாப்போம்
இதோ பாருங்க இந்த டவல், 100ன்னு சொன்னான் நான் 25.ஐயனாருக்கு வாங்கிட்டேன்
இது கைவச்ச பனியன் 70 சொல்லி 30 ஐயனாருக்கு கொடுத்தாகுடு இல்லேன்னா நீயே போட்டுக்கன்னு வீசீட்டேன்
இது 40 ஐயனார்
இந்த கண்ணாடி 67 ஐனார்
இந்த டார்ச் லைட் வெறும் 10 ஐயனார்தான்
அப்படியே காய்கறிக்கடைக்குப் போனேன்
வாழைக்காய் 2 ஐயனார்
கேரட் கிலோ 12 ஐயனார்....
ஏய் ஏய் ஸ்டாப்
இருங்கண்ணே இன்னும் பாக்கி இருக்கு,
என்ன இது? நீ வாங்கின சாமானுக்கு விலை சொல்றியா? அல்லது உங்க ஊர் ஐயனாருக்கு நேந்து விடுறியா...?
என்னடா....? என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார் ன்னு சொல்லிட்டு.......
நேத்து ஒரு சூப்பர் மார்க்கெட் போனோமா
ஆமா அங்கே எங்கேடா ஐயனார் வந்தார்...
அங்கேதாண்ணே இந்த ஐயனாரையே கண்டு பிடிச்சேன்
ஒரு குக்கரை எடுத்தேன் அதிலே 2300 ஐயனார்ன்னு விலை போட்டிருந்துச்சு...இப்படியே எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார்ன்னுதாண்ணே இருந்துச்சு....நான் என்ன நினைச்சேன், இனிமே ரூபாய்ன்னு சொல்லக்கூடாது ஐயனார்ன்னுதான் சொல்லணும்னு கண்டு பிடிச்சென்...எப்படிண்ணே என் கண்டு பிடிப்பு?பாராட்டுங்கண்ணே...
அட சட்டித் தலையா
ப்ளேகிரவுண்ட் மண்டையா
குள்ளக் கொடுக்கு
எதுக்குண்ணே என்னை இப்படியேல்லாம் இன் ஜல்ட் பண்றீங்க...
டேய் அது ஐயனார் இல்லேடா....
ஐயனார் இல்லையா !!!!!!!அப்படியெல்லாம் யோசிக்காம சொல்லாதீங்க ஐயனார் கண்ணைக் குத்தப் போறார்
இப்போ நான் உன் கண்ணைக் குத்தப்போறேன்
மடையா ஐயனார்ன்னா, ஐ.என்.ஆர். அப்படீன்னா,iஇந்தியன் ரூபாய் ,அதாண்டா ,இந்தியன் நேஷனல் மணி..
என்னது இந்தியன் நேஷனல் கவுண்டமணியா
அடி செருப்பாலே
டேய் இவனை யாராவது கெட்டியா பிடிங்க ...நாலு சாத்து சாத்தாணும்...
என்னை எதுக்கு சாத்தணும் நான் என்ன கதவா......
டேய் அவனைப் பிடிங்கடா...
அடே என் செல்லம் எங்கேடா கத்துக்கிட்டே
எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த லெசன்ணே
என்னமா ஜொலிக்குதுடா உன் மூளை....
சரி என்ன வாங்கினே எவ்வள்வுக்கு வாங்கினே காட்டு பாப்போம்
இதோ பாருங்க இந்த டவல், 100ன்னு சொன்னான் நான் 25.ஐயனாருக்கு வாங்கிட்டேன்
இது கைவச்ச பனியன் 70 சொல்லி 30 ஐயனாருக்கு கொடுத்தாகுடு இல்லேன்னா நீயே போட்டுக்கன்னு வீசீட்டேன்
இது 40 ஐயனார்
இந்த கண்ணாடி 67 ஐனார்
இந்த டார்ச் லைட் வெறும் 10 ஐயனார்தான்
அப்படியே காய்கறிக்கடைக்குப் போனேன்
வாழைக்காய் 2 ஐயனார்
கேரட் கிலோ 12 ஐயனார்....
ஏய் ஏய் ஸ்டாப்
இருங்கண்ணே இன்னும் பாக்கி இருக்கு,
என்ன இது? நீ வாங்கின சாமானுக்கு விலை சொல்றியா? அல்லது உங்க ஊர் ஐயனாருக்கு நேந்து விடுறியா...?
என்னடா....? என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார் ன்னு சொல்லிட்டு.......
நேத்து ஒரு சூப்பர் மார்க்கெட் போனோமா
ஆமா அங்கே எங்கேடா ஐயனார் வந்தார்...
அங்கேதாண்ணே இந்த ஐயனாரையே கண்டு பிடிச்சேன்
ஒரு குக்கரை எடுத்தேன் அதிலே 2300 ஐயனார்ன்னு விலை போட்டிருந்துச்சு...இப்படியே எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார்ன்னுதாண்ணே இருந்துச்சு....நான் என்ன நினைச்சேன், இனிமே ரூபாய்ன்னு சொல்லக்கூடாது ஐயனார்ன்னுதான் சொல்லணும்னு கண்டு பிடிச்சென்...எப்படிண்ணே என் கண்டு பிடிப்பு?பாராட்டுங்கண்ணே...
அட சட்டித் தலையா
ப்ளேகிரவுண்ட் மண்டையா
குள்ளக் கொடுக்கு
எதுக்குண்ணே என்னை இப்படியேல்லாம் இன் ஜல்ட் பண்றீங்க...
டேய் அது ஐயனார் இல்லேடா....
ஐயனார் இல்லையா !!!!!!!அப்படியெல்லாம் யோசிக்காம சொல்லாதீங்க ஐயனார் கண்ணைக் குத்தப் போறார்
இப்போ நான் உன் கண்ணைக் குத்தப்போறேன்
மடையா ஐயனார்ன்னா, ஐ.என்.ஆர். அப்படீன்னா,iஇந்தியன் ரூபாய் ,அதாண்டா ,இந்தியன் நேஷனல் மணி..
என்னது இந்தியன் நேஷனல் கவுண்டமணியா
அடி செருப்பாலே
டேய் இவனை யாராவது கெட்டியா பிடிங்க ...நாலு சாத்து சாத்தாணும்...
என்னை எதுக்கு சாத்தணும் நான் என்ன கதவா......
டேய் அவனைப் பிடிங்கடா...
Wednesday, 18 January 2012
கார்ட்டூனிஸ்ட் கோமா
தம்பி !ஆ காட்டு .....
அ ஆ கூட தெரியாம எப்படி அங்கிள் டாக்டரா ஆனீங்க?
---------------------------------------------------------------------
அதுவா ?திட்டக் கமிஷன்லே அவரைப் போடலையாம் ..
------------------------------------------------------------------------------
பேப்பர்லே என்ன ந்யூஸ்....ஓசிலே பேப்பர் வாங்கி படிச்சவனை ஒருத்தன் போட்டுத் தள்ளிட்டானாம்
-------------------------------------------
அடுத்த முயற்சி இன்னும் மிளிரும் .கைகளும் விரல்களும் வரைவது எவ்வளவு பழகவேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் .கைகள் கைவர நாளாகும்
Tuesday, 17 January 2012
செந்திலின் சந்தேகங்கள்
அண்ணே அண்ணே ஒரே ஒரு நிமிஷம் நில்லுங்கண்ணே,ஒரு மீட்டர் வாங்கிட்டு வந்துடுறேன்...
ஒரு மீட்டர் என்னடா வாங்கப் போறே?
ரிப்பன் ண்ணே
இங்கே எங்கேடா ரிப்பன் கிடைக்கும்?
அதோ பாருங்கண்ணே ரிப்பன் பில்டிங்
.டேய் காஞ்ச மண்டை அது ரிப்பன் பிரபு பில்டிங்..
பிரபுவுக்கு எதுக்குண்ணே ரிப்பன்..அவர் பெரிய ரிப்பன் வியாபாரியாண்ணே
டேய் வேண்டாம் உதை படாதே.
--------------------------------------------
சரிண்ணே ரிப்பனை விடுங்கண்ணே ..ஒரு ’தம் ’வாங்கிட்டு வரவாவது விடுங்கண்ணே..
என்னது தம்மா?!!!!!!!
ஆமாண்ணே அங்கே பாருங்க சார்மினார் ஃபேக்டரி..
ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துடுறேன்..விடுங்கண்ணே உங்களுக்கு வேணும்னாலும் வாங்கிட்டு வந்து ஒழுங்கா தரேன்
டேய் டேய் என் கோபத்தைக் கிண்டாதே
அது தொழுகை பண்ற இடம்டா....
அது என்ன சார் மினார்
டேய் காலி தலையா...சார்ன்னா நாலு ...மினார்ன்னா தூண் ,அதான் சார்மினார்.
அப்போ குதுப்ன்னா ஒண்ணா அண்ணே
என்னடா சொல்றே குதுப்ன்னா ஒண்ணான்னு கேக்றேன்
டெல்லிலே குதுப் மினார்ன்னு இருக்கே ஒரே ஒரு தூண்தானே அப்போ ’குதுப்’னா ஒண்ணு ன்னுதானே அர்த்தம் ’ஏக்’ன்னும் சொல்லலாம் குதுப்ன்னும் சொல்லலாம் அப்படித்தானே அண்ணே...என்ன ஹிந்தியோ...
டேய் அவனைப் பிடிங்கடா ...
---------------------------------------------..
இதுவா ?இவங்கதான் சுதந்திரதேவி
இது என்னண்ணே சுதந்திரம்?ஒரே இடத்திலே வருஷக்கண்ணக்கா கையைத்தூக்கி ,டார்ச்சைப் பிடிச்சுட்டு கை வலிக்காது...ஒரு நாள் கூட கை மாத்த முடியாம, கால்வலி போக உக்கார முடியாம ...இது எப்படிண்ணே சுதந்திரமாகும்...போங்கண்ணே உஙளுக்கு ஒண்ணுமே தெரியாது...
யாராவது அவனைப்பிடிச்சு என் பேரைச் சொல்லி நாலு சாத்து சாத்துங்களேன்.
[புகைப்படங்கள் நெட் உபயம்]
Thursday, 5 January 2012
சிரிங்களேன்
ஒரே ஒரு ஜோக் ,கம்முனு கிடங்க
.சென்னையில் ’ஆழ்வார்பேட்டை ஆண்டவா&ஆண்டவி’யாகக், குடித்தனம் தொடங்கினோம்.
.மருமகள் ,’கூறு’ எப்படி என்று பார்த்து விட்டு,
”பிழைத்துப் போகட்டும் ”,என்று, 45விழுக்காடு மார்க் போட்டு விட்டு ஊர் திரும்பினார்கள் என் மாமனார்,மாமியார்.
பாரீஸ் கார்னரில் ஆஃபீஸ்.
தினமும் ஆட்டோவில் வந்து வந்து இறங்குவதைப் பார்த்து,.
பக்கத்து வீட்டு மாமி ,கேட்பார்
தினமும்ஆட்டோவா.!!???..எவ்வளவு ஆகும்?
8 ரூபாய் மாமி
அம்மாடி..!!!!!
இப்பொழுது 60 ரூபாய்க்கு வாங்க யோசிக்க வைக்கும், நெஸ்கஃபே அன்று நான் வாங்கி மகிழ்ந்தது வெறும் 3.50க்கு[அப்படியே கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.[அந்தக் கால சினிமாக்களில் நான் ரசிக்கும் சில வசனங்கள்...
.”நல்ல சம்பளமா ?எவ்வளவுடா?
ரூபாய் 200ப்பா”.
ரெண்டு ப்ளேட் இட்லி,நாலு செட் தோசை,பொங்கல்,வடை ...இந்தாங்க
பில்..6ரூபாய் 7அணா]
என்னை சந்தோஷமாக வெளியே ஈட் அவுட் என்று அழைத்துச் சென்றதெல்லாம் ,என் சமையலிலிருந்து தப்பிக்கத்தான் என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது.
ஒரு நாள் ,பஸ் பிரயாணம் ,கூட்டமில்லாத பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.
கொஞ்ச தூரம் போனதும் ,இவர் ,பொய் சொல்லப் போறேன் பொய் சொல்லப்போறேன் என்று பாடாத குறையாக,“இந்த பஸ்ஸில் வர்ரவங்களிலேயே நீதான் ரொம்ப அழகா இருக்கே!!!!”என்றார்.
பூரித்துப் போனேன் ...மெதுவாக டாஷ் போர்டிலிருந்து ,பின் சீட் வரை கழுத்தை இயல்பாக வளைத்துத் திரும்பிப் பார்த்தால்........
*******
#######
???????
மேலே மூணு லைனும் ,எள்ளும் கொள்ளும் வெடிப்பதை குறிக்கும் சிம்பல்கள்.
அவை வெடித்துச் சிதறும் முன் ,வாசித்து விடுங்கள்.
பஸ்ஸில் என் சக லேடீஸ் பிரயாணிகள் அனைவரும்
55ல் ஒருஇளநரை ,
63ல் ஒரு பாதி நரை,
69ல் ஒரு முழு நரை,
என்று ..அமர்ந்திருந்தனர்.
அவ்வளவுதான் அதுதான் அவருடைய முதல் ஜோக் .கமா போடாமல் முற்றுப் புள்ளிவைக்கப் பட்ட ஜோக்
இப்பொழுது சொல்லுங்கள் ,இவருக்கு நான் ஜோக் தடா போட்டது சரிதானே?
Wednesday, 4 January 2012
புத்தகவெளியீடு
தமிழ்கடல் திரு நெல்லைக்கண்ணன் அவர்களின் அணிந்துரையுடன் திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் ஆதரவோடு வெளியாகியிருக்கிறது.என்பதை பதிவுலக சகோதர சகோதரிகளோடு சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்கிறேன்
புத்தகம் கிடக்கும் இடம்
.மணிமேகலைப் பிரசுரம்.
தொலை பேசி எண்:
044 24342926
044 24346082 .
Post Box No 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர் Chennai, Tamil Nadu 600017
Post Box No 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர் Chennai, Tamil Nadu 600017
தற்பொழுது துவங்கப்பட்டிருக்கும் புத்தகக்கண்காட்சியில் மணிமேகலை பதிப்பகத்தாரின் ஸ்டாலில் கிடைக்கும்
Subscribe to:
Posts (Atom)






