Thursday, 9 July 2009

கிச்சு கிச்சு தாம்பாளம்

அந்த கூட்டத்திலே யார்டா உன்னோட தாத்தா?
அதோ ’பொக்கே’யோட வராரே அவர்தான்

உங்க மிருகக்காட்சி சாலையிலே ,ஒரு ஹிப்போ உடம்பு முடியாம இருந்துச்சே எப்படி இருக்கு
அதை ஏன் கேக்றீங்க...’ஹிப்பவோ ஹப்பவோ’ன்னு இருக்கு

”மத்த நடிகைங்க மாதிரி நான் வயசையெல்லாம் மறைக்கிறதே இல்லை”
”அப்படியா அப்ப உங்க வயசைச் சொல்லுங்க ”
”உங்க வயசிலே ரெண்டு டிஜிட்டையும் பெருக்கி வர்ர விடையோட உங்க அப்பா வயசைக் கூட்டி அம்மா வயசைக் கழிச்சு ...அதை ஒண்ரையால பெருக்கி வந்த விடையில் நடு நம்பர்தான் என் வயசு.....”

டாக்டர் :நர்ஸ் அங்கே என்ன பேஷண்ட்டோட தகறாரு....?
நர்ஸ்: கைவலிக்கு கைகண்ட மருந்து ,தலைவலிக்குத் தலை சிறந்த மருந்து மாதிரி இவரோட நெஞ்சு வலிக்கு நெஞ்சு சிறந்த மருந்து வேணுமாம் டாக்டர்.

”எனக்குப் பதிலாகப் போருக்குப் போவதற்காகவே, க்ளோனிங் முறையில் தயாரிக்கப் பட்ட என் செராக்ஸ் காபி எங்கே?”
”...ஐயோ மன்னா!!!அப்படியென்றால், சற்று முன் அந்தப் புரத்துக்குள் போனது நீங்கள் இல்லையா மன்னா?..அது நீங்கள்தான் என்று எண்ணி நானும் பேசாமல் இருந்துவிட்டேன்..”

”நாயுடுஹால் கடையில் இன்று என்ன இவ்வளவு கூட்டம்?அதிரடி தள்ளுபடியா..?”
”....அதெல்லாம் இல்லை ...சினிமாவில் நடிக்க பாடிலாங்வேஜ் தெரியணும்னு சொன்னாங்களாம் அதான் இப்படிக் கூட்டமாய் வந்திருக்காங்க”



23 comments:

நையாண்டி நைனா said...

நடத்துங்க... நடத்துங்க.... நல்லா தான் இருக்கு....

(ஹி... ஹி... ஹி.... என்னோட பேருலேயே லேபிலா...)

நட்புடன் ஜமால் said...

குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை

அரை மணித்துளிகளா பார்த்துகிட்டு இருக்கேன்


நல்ல ஹாஸ்யம் ...

goma said...

நடத்துங்க... நடத்துங்க.... நல்லா தான் இருக்கு....

(ஹி... ஹி... ஹி.... என்னோட பேருலேயே லேபிலா...)

உங்களை உள்ளே இழுக்கவேண்டுமென்றால் அதானே வழி ....அதான் நையாண்டி லேபிள்...
ஹி ஹி ஹி

goma said...

அரை மணித்துளிகளா பார்த்துகிட்டு இருக்கேன்...

நட்புடன் ஜமால்
அரைமணித் துளிகள் என்றால் அது உங்களுக்கு அவ்வளவோ நேரமா....சரி சரி ..பாராட்றீங்கன்னு நல்லா புரியுது..நட்புடன் ஜமாலுக்கு .நன்றியோ நன்றி

செந்தழல் ரவி said...

சொந்த சரக்கா...

சூப்பர்.........

goma said...

என்ன கேட்டு விட்டார் என்னைக் கேட்டுவிட்டார் சொந்த சரக்கா என்று......
செந்தழல் ரவி
நானே ஹாஸ்ய- பனை ஏறி ,கற்பனை-பானையை இறக்கி,ட்ரேட் ச்சிக்ரெட் கலவைகள் கலந்து காய்ச்சி , சொந்தமாகக் காய்ச்சிய ‘சொந்த சரக்கு’
கிக்கு ஏறுச்சா ஹொஹொஹொஹ்ஹோ ....

செந்தழல் ரவி said...

ஆஹா...

கும்மியடிச்சிட்டீங்களே............

நசரேயன் said...

//goma said...

என்ன கேட்டு விட்டார் என்னைக் கேட்டுவிட்டார் சொந்த சரக்கா என்று......
செந்தழல் ரவி
நானே ஹாஸ்ய- பனை ஏறி ,கற்பனை-பானையை இறக்கி,ட்ரேட் ச்சிக்ரெட் கலவைகள் கலந்து காய்ச்சி , சொந்தமாகக் காய்ச்சிய ‘சொந்த சரக்கு’
கிக்கு ஏறுச்சா ஹொஹொஹொஹ்ஹோ ....
//

புளியங்குடியிலே கள்ளு கடை வச்சு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லை

நசரேயன் said...

உங்க கிச்சு கிச்சு தாம்பாளத்தாலே எனக்கு ஒரு சரக்கு கிடைச்சி இருக்கு, அதை எழுதிட்டு சொல்லுறேன்

goma said...

உங்க கிச்சு கிச்சு தாம்பாளத்தாலே எனக்கு ஒரு சரக்கு கிடைச்சி இருக்கு, அதை எழுதிட்டு சொல்லுறேன்

நசரேயன்
கட்டாயம் சொல்லுங்க சரக்கு நல்ல சரக்கான்னு நான் பார்த்து சர்டிஃபை பண்றேன்

goma said...

புளியங்குடியிலே கள்ளு கடை வச்சு இருந்தீங்கன்னு சொல்லவே இல்லை

அது தெரியாம நீங்க கடையநல்லூர் சொக்கம்பட்டி கிருஷ்ணாபுரம்,இந்த பக்கம் வாசுதேவநல்லூர்னு தேடித் தேடிப் போனீர்களா....ஐயோ பா...வம்

goma said...

கும்மியடிச்சிட்டீங்களே...........

செந்தழல் ரவி
சும்மா கும்மி கும்மி அடிப்போம்ல

T.V.Radhakrishnan said...

super

goma said...

T.V.ராதகிருஷ்ணன்
நன்றி

Geetha Sambasivam said...

நன்னிங்கோ!!! :))))))))))))))

Geetha Sambasivam said...

grrrrrrrrrrr akkiramamaa irukkee?வந்தோமா, கமெண்டினோமானு இல்லாம, உங்க பதிவு ப்ரொபைல் எல்லாம் கேக்குது??? என்ன அநியாயம்???? :P:P:P:P:P அதுவும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும்??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

goma said...

வர வர எதுக்குத்தான் செக்யூரிடின்னு வரைமுறையே இல்லாம போச்சே ...விட்டா...ஹாஸ்யத்து வாசலிலே
பாம் டிடெக்டர் வச்சாலும் வைப்பாங்ய போலிருக்கே...
நான் ஒண்ணுமே பண்ணலியே...எப்படி இப்படியெல்லாம் நடக்குது..அதுவும் கீதாசாம்பசிவம் வந்தால் மட்டும்...
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

goma said...

நன்னிங்கோ!!! நமக்குள்ளே
எதுக்குங்கோ நன்னிங்கோ ?பிடிங்கோ
பதில் நன்னிங்கோ

goma said...

கீதா
இப்பொழுது ப்ரொஃபைல்,ஆஃபீஸ் ஃபைல் எல்லாம் கேட்காமல் கமெண்ட்ட முடிகிறதா என்று பார்த்துச் சொல்லுங்களேன்
ப்ப்ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கீதா சாம்பசிவம் said...

இப்போத் தான் உங்க பதிலைப் பார்க்கிறேன்.இந்த ஃபாலோ அப்னு ஒண்ணு இருக்கிறது நமக்கு நினைப்பிலேயே வரதில்லை, பலசமயமும், அதனாலே உங்க பதிவுக்கு நான் தேடிப் பிடிச்சுத் தான் வந்து பார்க்கணும். அபூர்வமா சில சமயம் ஃபாலோ அப் கொடுக்கறதும் உண்டு! அப்பாடி இந்த கமெண்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா???

கீதா சாம்பசிவம் said...

ஃபாலோ அப் கொடுத்துட்டேன்! :))))))

கீதா சாம்பசிவம் said...

முன்னாடி கொடுத்த ரெண்டுக்கும் செக்யூரிடி கேட்கலை, இப்போ ஓகே!

goma said...

இந்த ஃபாலோ அப்னு ஒண்ணு இருக்கிறது நமக்கு நினைப்பிலேயே வரதில்லை, பலசமயமும், அதனாலே உங்க பதிவுக்கு நான் தேடிப் பிடிச்சுத் தான் வந்து பார்க்கணும். அபூர்வமா சில சமயம் ஃபாலோ அப் கொடுக்கறதும் உண்டு! அப்பாடி

நீங்க மட்டும் ஃபாலோ அப் பற்றி விவரம் சொல்லேன்னு வையுங்க, என் கமெண்ட் செக்‌ஷனை அப் அப் அப்ன்னு அப்றதா இருந்தேன்...அப்-றம் பார்த்தா..ஓகேன்னு உங்க பின்னூட்டம் பார்த்தேன்..அப்-றம் என்ன அப்-ப்பாடின்னு இருக்கேன்.அப்-றமா சந்திப்போமா..

[ஆளை விடு தாயீ ன்னு அசரீரி கேக்குதே]