Wednesday, 17 August 2011

ஒரு முத்து ,இரு முத்து ,மும்முத்து.

1) விரும்பும் மூன்று விஷயங்கள்

1.காபியுடன் பேப்பர்
2.பேப்பருடன் சுடோகு
3.சுடோகுவுடன் காபி
-----------------------------------------------------
2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

1.பெப்சோடெண்ட் ஷாருக்கான் விளம்பரம்
2.அடிபட்ட புலியும் ,விடுபட்ட புலியும் ,சண்டையிடுவது போல் நடக்கும் அரசியல்
3.தற்பொழுது காய்கறி கடைகளில் நிறுவையை அலட்சியமாய் ஒரே தட்டில் பொத்து பொத்தென்று போட்டு தப்புத் தப்பாய் எடை போடுவது
--------------------------------------
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

1.நெடுந்தூர பேருந்து பயணம்
2.ராட்சச ராட்டினம்
3. வீட்டில் மாட்டியிருக்கும் மூங்கில் நாற்காலி ஊஞ்சல். [மூன்றுக்கும் பொதுவான காரணம் தலைவலி,தலை சுற்றல் ஏற்படுத்தும் என்பதுதான்]
--------------------------
4) புரியாத மூன்று விஷயங்கள்?

1..ரூபிக்யூப் கண்டுபிடிப்பு.[எப்படி எப்படி என்று புரியாமல் வியந்ததுண்டு
30 ஆண்டுகளுக்கு முன் இந்த புதிரை ,புத்தகம் பார்த்து படித்து ,3 நிமிடங்களில் போட்டிருக்கிறேன் .இப்பொழுது எடுத்தால் ஒரே திரு திருதான்....திருப்பவே யோசிக்கிறேன்]

2.நாம் எப்படித்தான் ஒழுங்காகக் கையாண்டாலும் இந்த டெலிஃபோன் ஒயர் இஸ்திரி பெட்டியின் ஒயர் எப்படி முறுக்கிக் கொள்கிறது?
3.பாட்டி என்ற பாத்திரத்தை மட்டும் இந்த பெண்கள் அழகாகக் கையாளுவது எப்படி
--------------------------.

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

1.,இன்றைய நாளிதழ்
2 ஒரு பேனா
3  வாட்ச்
---------------------
6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

1.அவர்கள் சொல்வது பொய் என்பது நமக்குத் தெரியும் என்று ,
தெரிந்தும் தைரியமாகப் பொய் சொல்பவர்கள்
2.ஒருவர் கூறிய ஒரே ஒரு சொல், ஒரு பெரிய நாவலாக ,அவர் காதுக்கே திரும்ப வருவது
3.ஆதித்யா சேனல்
-----------------------------
7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

1-சகா இப்படி மாட்டி விட்டாரே என்ற படி 3 விஷயங்களை அசை போடுகிறேன்
2-.ராகிங் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்
3-சைட் பை சைட் சேட்டிங்
---------------------------
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

1-நான் செய்ய வேண்டும் என்று இறைவனால் கட்டளையிடப்பட்ட காரியங்களைக் கண்டு பிடிக்க வேண்டும்
2-கண்டு பிடித்ததைச் செய்து முடிக்கவேண்டும்
3-இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா கடவுளே என்று கேட்க வேண்டும்
------------------------------------
9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

1-இன்னும் 2 புத்தகம் வெளியிட வேண்டும்
2-குறளுக்கு பொழிப்புரை எழுத வேண்டும்
3- என் ஜோக்குகளுக்குநானே கார்ட்டூன் வரைய வேண்டும்
---------------------------
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.தகுதி இல்லாதவர்களிடமிருந்து அறிவுரை
2.சாப்பாட்டில் குறைகள் கூறுவது
3.அடுத்தவருடைய வருமானம்,வயது.
--------------------------
11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

1.டிஃப்ஃபானி கலை
2.மெக்கானிசம்
3.நீச்சல்
---------------------------- 
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

1.கட்லெட்
2.ஆலு பராட்டா.வித் தயிர்
3.கூட்டாஞ்சோறு
------------------------
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

1.கேள்வியின் நாயகனே...
2.வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் .
3.எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..
-----------------------
14) பிடித்த மூன்று படங்கள்?

1.ராஜ் கபூரின் சங்கம்
2-தமிழ்படம்..
3-வள்ளி
----------------------------- 
15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)

உணவு உடை இருப்பிடம் எப்பொழுதும் சொல்வது.அது போக...
1-ஓ2
2-ஹெச்2ஓ..
3-பணம்.[ரோட்டி கப்டா மக்கான் வாங்க.]
---------------------------------------
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

என்னை எப்பொழுதும் வம்புக்கு இழுக்கும் இரண்டு தம்பிகள்
1-திவா
2-நாஞ்சில் மனோ
3-வம்பு பண்ணாத சகோதரி சித்ரா



68 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சீக்கிரமே கார்டூன் வரைஞ்சு ஹாஸ்ய புக் போட வாழ்த்துக்கள்..:)

Lakshmi said...

முத்துக்கள் மூன்றுமே நல்லா இருக்கு.

அமைதிச்சாரல் said...

ஷாருக் கான் பிடிக்கலையா.. ஏங்க்கா?..

அமைதிச்சாரல் said...

ஷாருக் கான் பிடிக்கலையா.. ஏங்க்கா?..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

3

கே. பி. ஜனா... said...

//1.காபியுடன் பேப்பர்
2.பேப்பருடன் சுடோகு
3.சுடோகுவுடன் காபி//
ஹா ஹா!

சகாதேவன் said...

நான் மாட்டிவிடவில்லை. தூண்டிவிட்டேன்.
நன்முத்துக்கள் பதித்தீர்கள்

சகாதேவன்

ஹுஸைனம்மா said...

அயர்ன் பாக்ஸ், டெலிஃபோன் ஒயர்... அதானே?

//டிஃப்ஃபானி கலை//
இது என்ன?

பேப்பர், காஃபி - சேம் பிளட்..

goma said...

முத்துலெட்சுமி

நன்றியோ நன்றி

goma said...

லஷ்மி

ரொம்பநாள் ஆச்சு நீங்க வந்து.
நன்றி

goma said...

ஹுஸ்ஸைனம்மா

டிஃப்ஃபானி கலை,க
ண்ணாடித் துண்டுகளை வெல்டிங் மூலம் இணைத்து லாம்ப் ஷேடுகள்,ஜன்னல் கண்ணாடிக்கதவுகள் வடிவமைத்தல் .
உங்களுக்காக படம் பதிந்திருக்கிறேன்

ஹுஸைனம்மா said...

படம் - உங்க ஐடி படமா அக்கா?

goma said...

சகா
நல்லாவே தூண்டி விட்டீர்....
மாட்டி என்பதை தூண்டி என்று மாற்றி யோசிக்கிறேன்
நன்றி சகா.

goma said...

அமைதிச்சாரல்
நான் ,ஷாருக் பிடிக்காது என்றா சொன்னேன் 1.பெப்சோடெண்ட் பேஸ்டுக்காக ஷாருக்கான் நடித்த விளம்பரம்,பிடிக்கவில்லை என்று சொன்னேன் .
ஷாருக் கஜோல்,[காஜோல்]ஜோடி மறக்க முடியுமா.

goma said...

நண்டு
என்ன சொல்றீங்க?
3 மட்டும் தெரியுது.

goma said...

கே.பி.ஜனா
காலையில் 7 மணிக்குள் இதுதான் அன்றைய நாளின் ஆரம்ப நிகழ்ச்சி.

goma said...

ஹுஸைனம்மா said...

படம் - உங்க ஐடி படமா அக்கா?

அடடா !!!அப்படியே கப்னு பிடிச்சுட்டீங்களே.என் ஐ டி படமும் டிஃப்ஃபானி மாதிரிதான் இருக்கு ஆனா டிஃப்ஃபானி இல்லை.
[நான் ஒரு காலத்தில் ,அதாவது 2 வருடத்துக்கு முன்]கேமராவும் கையுமாக மெட்ரோ ரயிலில் மந்தவெளி ஏறி அடுத்த ஸ்டேஷன் மைலாப்பூர் இறங்கி,தொரப்பாக்கம் அக்காவீடு செல்ல , வேளச்சேரி வரை பயணித்து மறுபடியும் ஆட்டோவில் தொரப்பாக்கம் வந்து ...சிட்டுக்குருவியாய் வலம் வந்த சமயம் ..நான் எடுத்த ..ஸ்டேஷன் கூரை அது.

ஹுஸைனம்மா said...

//ஸ்டேஷன் கூரை அது. //
அவ்வ்வ்வ்வ்...

படம் இணைச்சிருக்கேன் சொல்லிருக்கீங்க, ஆனா பதிவில (அப்ப) படத்தைக் காணோம், ஐடி படம்தான் புதுசா இருந்துது.. அது டிஃப்ஃபானி மாதிரியும் இருந்துது.. அவ்வ்வ்வ்...

(இப்ப) படம் பாத்தேன்... இதுதான் டிஃப்ஃபானியா... அடிக்கடி பாத்த விஷயமாச்சே இது.. படிச்சுகிட்டதும் இதுமாதிரி ஒண்ணு செஞ்சு எனக்கு கிஃப்டாத் தரணும், சரியா!

இன்னொரு விஷயம்.. நல்லவேளை டிஃப்ஃபானி “கலை”ன்னு முதல்லயே சொன்னீங்க.. இல்லன்னா, இங்க பிரபலமா இருக்க ‘டிஃப்ஃபானி’ பிராண்ட் சாக்லேட், பிஸ்கட், கேக்கைத்தான் சொல்றீங்கன்னு நினைச்சிருப்பேன்... அம்புட்டு அப்பாவி நானு!! ;-))))))))

goma said...

கிஃப்டா தாரேன் நீங்க எனக்கு டிஃப்ஃபானி சாக்லேட் பிஸ்கட் கேக் தரணும் .டீல் ஓகே?

goma said...

என் பதிவில் இன்னுமா டிஃப்ஃபானி லைட் வரவில்லை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முத்துக்கள்.

ஷாருக் கான்... :( ஒன்றும் சொல்வதற்கில்லை...

goma said...

நன்றி வெங்கட் நாகராஜ்

ஸ்ரீராம். said...

மூன்றுகள் எல்லாமே உங்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தன.

goma said...

ஒருவரை எடை போட அவர் சொல்லும் வார்த்தைகளே நல்ல தராசு....இல்லையா ஸ்ரீராம்

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு.

goma said...

நன்றி காஞ்சனா

Murugeswari Rajavel said...

நல்லா இருக்கு.பிடித்த பாடல்கள் அருமை.

goma said...

murugeswari
நன்றி .
கேள்வியின் நாயகன் பாடல் ஸ்ரீவித்யாவின் நடிப்போடு கலந்த விதம் அருமை
வாழ்வே மாயம்
’83ல் எங்கள் தந்தை இறந்த ஆண்டு பிரபலமான பாடல்..மனதுக்குள் ஓலமிடும்
எத்தனை காலம்தான் ...பாடல்
எம் ஜி ஆர் ,பானுமதி மலைக்கள்ளன் சின்ன வயதிலேயே கேள்வியாய் கொக்கி போட்டது.

இராஜராஜேஸ்வரி said...

2.அடிபட்ட புலியும் ,விடுபட்ட புலியும் ,சண்டையிடுவது போல் நடக்கும் அரசியல்//

பதிவுப் புலிக்கு வாழ்த்துக்கள்.

கீதா சாம்பசிவம் said...

ஷாரூக்கான் விளம்பரம் எனக்கும் பிடிக்கலை தான்; ஆனால் பாருங்க நம்மை எல்லாம் யாரு கேட்கிறாங்க! :P

goma said...

பதிவுப் புலிக்கு வாழ்த்துக்கள்.
என்று பாராட்டிய இராஜராஜேஸ்வரிக்கு நன்றி.

எல்லா புகழும் ,புலியைத் தூண்டிவிட்ட சகாதேவனுக்கே

கீதா சாம்பசிவம் said...

மற்றபடி உங்க மூன்றாவது பயங்கள் எனக்கும் தான் பயம். இதோடு எஸ்கலேட்டரில் செல்வதையும் சேர்த்துப்பேன்.

மத்தவங்க என்ன சொல்றாங்க வெயிட்டிங்!

goma said...

கீதா
இந்த ஷாருக் கான் தினமும் இப்படி டெண்டல் க்ளாஸ் எடுத்து எப்போ பல் தேய்க்கிறது,எப்போ ஸ்கூல் போறது...செம கடுப்பான விளம்பரம்.

எஸ்கலேட்டர் பயமா அப்போ மால் எல்லாம் எப்படி படி படி யாத்தான் போகணுமா.
ஐ பிட்டி யூ...

என் பெண் 10 வயதில் எஸ்கலேட்டர் இல்லாத மாலில் அடித்த ஜோக்.
அம்மா இந்த ஷாப்பிங் காம்ப்ளெக்சில் ,’நோ’கலேட்டர்

கீதா சாம்பசிவம் said...

கோமா, No pitying me! பிடிக்காத வார்த்தை! :P நான் ரொம்ப மோசமான ஷாப்பர். மாலுக்கெல்லாம் போய் ஷாப்பிங் செய்யறதில்லை; ஆனாலும் எங்க பையர், பொண்ணு கூட்டிட்டுப் போவாங்க. லிஃப்ட் இல்லாத மாலும் உண்டா? போற இடத்திலே எல்லாம் லிஃப்ட் இருக்குமே. அவங்களை ஷாப்பச் சொல்லிட்டு நான் ஒரு அமைதியான இடம் தேடி உட்கார்ந்துடுவேன். அவங்க ஷாப்பிங் முடிச்சுட்டு வந்து கூட்டிட்டுப்போவாங்க. :))))))))

goma said...

i pity you என்று ஒரு கொக்கி போட்டேன் கீதா ,அமாவாசைக்கு முன்னாடியே வந்து விட்டார்கள்.....அடுத்த கொக்கி என்ன???? :-))))))))))))

என் பெண்ணுடைய ஜோக்குக்கு கமெண்டலியே.....i pity me

நானானி said...

கீதாம்மா....இப்படித்தான் இருக்குதா உங்க ஷாப்பிங்! ஐ டூ பிட்டி யூ!!

நானானி said...

கோமா,எட்டாவது கேள்விக்கான பதில்களில் எட்டாத உயரத்துக்கு போய்விட்டீர்கள். யாருக்கும் தோணாத பதில்கள். நல்ல சிந்தனை...உங்க சிந்தனைக்குக் கேக்கணுமா

goma said...

கீதாம்மா நானானிக்கு உங்கள் பதிலைத் தாங்கம்மா.......

கீதா சாம்பசிவம் said...

என் பெண்ணுடைய ஜோக்குக்கு கமெண்டலியே.....i pity me //

heheheheஉங்க பெண்ணாச்சே, கேட்கணுமா! :D

கீதா சாம்பசிவம் said...

நானானிக்கு பதில் தானே?? இதோ வந்துட்டே இருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான் பதில்

ஷாப்பிங் செய்யாட்டி என்ன வந்தது?? எனக்கு போரடிக்கும் ஒரே விஷயம் இந்த ஷாப்பிங் தான்! :)))))))

goma said...

நானானி
எட்டாவது கேள்வி பதில்கள்....பாராட்டுக்கு நன்றி...
நம்ம தலைலே என்ன எழுதியிருக்கானோ என்று எல்லோரும் கேட்கும் கேள்விதான்....கொஞ்சம் மெருகூட்டினேன்

goma said...

வலை போல் உள்ள என் வலைப்பூவின் ப்ரொஃபைல் வலையில் கீதாசாம்பசிவம் ப்ரொஃபைல் யானை நாலு முறை விழுந்து விட்டது...
நானானி பதிலுக்கு நன்றாகவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஜிக்கிறார்.
நானானி போல் யாராவது இன்னும் உசுப்புங்களேன்....பிளிரட்டும்

ஹுஸைனம்மா said...

//யாராவது இன்னும் உசுப்புங்களேன்....பிளிரட்டும்//

“சபாஷ், சரியான போட்டி”னு பி.எஸ்.வீரப்பா எக்காளமிட்ட மாதிரி இருக்கு. நானும் இருந்து வேடிக்கை பாக்கிறேன் - எல்லாரையும். ;-))))))))

goma said...

கீதா அடுத்த முறை உங்கள் ’சோ கால்டு ஷாப்பிங்’ பண்ணும் போது என்னையும் கூப்பிடுங்கள் நீங்கள் சாம்பசிவனே என்று உட்கார்ந்திருங்கள் நான் உங்களுக்கு, சிவனே என்று கம்பெனி தருகிறேன்.

goma said...

“சபாஷ், சரியான போட்டி”னு பி.எஸ்.வீரப்பா எக்காளமிட்ட மாதிரி இருக்கு. நானும் இருந்து வேடிக்கை பாக்கிறேன் - எல்லாரையும். ;-))))))))

உங்களையும் ஹோதாவில் இறக்கிவிட்டால் என்ன என்று யோசிக்கிறேன் ஹுஸ்ஸைனம்மா

ஹுஸைனம்மா said...

//உங்களையும் ஹோதாவில் இறக்கிவிட்டால் என்ன//

பெரியவங்க பேசும்போது சின்னப்பசங்க நடுவுல வரப்படாதுன்னு அம்மா சொல்லிருக்கா.. ;-))))))

goma said...

பெரியவங்க பேசும்போது சின்னப்பசங்க நடுவுல வரப்படாதுன்னு அம்மா சொல்லிருக்கா.. ;-))))))

சொல்லியிருப்பாளே...
இந்த மாதிரி விஷயத்திலெல்லாம் அம்மா பேச்சைத் தட்டாத ஹுஸைனம்மா keep it up

mummy told me not to ,
talk to stranger கதையா இருக்கே[விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?கூல் ]

goma said...

கீதா
heheheheஉங்க பெண்ணாச்சே, கேட்கணுமா! :D



அது!!!!!

நானானி said...

கீதாம்மா...கர்ர்ர்ர்ர்ர்ன்னு உறுமுறீங்களா? நான், என் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தூக்கத்தில் விட்ட குறட்டையோன்னு நெனச்சேன். எங்கூட ஷாப்பிங் வந்தீங்கன்னா நொந்துடுவீங்க! இப்ப வந்துடுமே சுர்ர்ர்ர்ர்ர்ன்னு!!!

திவா said...

வரேன் வரேன்! பொறுமை!

goma said...

யானை கிட்டே எல்லாம் நான் பொறுமை காட்றதில்லை......

MANO நாஞ்சில் மனோ said...

மாட்டிகிட்டேனே ராமா.......அவ்வ்வ்வ்வ்வ்...

திவா said...

பொறாமைதான் காட்டுவீங்களா?

goma said...

பொறாமைதான் காட்டுவீங்களா?
திவா
பொறாமை காட்றது இல்லை ,பொறாமை படுறதுன்னு சொல்லணும் ...
இவ்ளோ பெரிய யானைக்கு [திவானைக்கு ]இது கூட தெரியலையே...

goma said...

வந்துட்டார்ய்யா வந்துட்டார்
அவ்வ்வ்வ்வ்வ்வ்-வளவுதான்
பிடிச்ச மூணு எதுன்னு கேட்டா இதான் பதிலாக இருக்கும்
1-அவ்
2-அவ்வ்
3-அவ்வ்வ்....

கீதா சாம்பசிவம் said...

@நானானி, என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போனா உங்களுக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். போதுண்டா சாமினு சொல்லுவீங்க. நான் பாட்டுக்கு தேமே னு உட்கார்ந்திருப்பேன். நீங்க தனியா ஷாப்பணும். :௶

திவா said...

சரி சரி பிடிங்க ச்சே படிங்க....

அம்பாளடியாள் said...

ஒவ்வொண்டும் அருமையான மூன்று முத்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து எழுதுங்கள் .இன்று
என் தளத்தில் சிரிப்பொலி .வந்து நீங்களும் சிரியுங்கள் ....

அமைதிச்சாரல் said...

ஆஹா.. கீதாம்மா. ஆனைக்கும் அடி சறுக்கிடுச்சே :-)))

எஸ்கலேட்டர் இருக்கற மால்ல மட்டுந்தான் ஷாப்பிங் பிடிக்காதா :-))

Chitra said...

After a week of blog break, reporting for duty.... :-)

goma said...

இந்த ஆண்டின் சிறந்த பதிவாக நான் இந்த பதிவைத் தேர்ந்தெடுத்திறுக்கிறேன் ...பின்னூட்டம் எண்ணிக்கை 60 த் தொட்டு விட்டது...இது எனக்கு ரெகார்ட் பிரேக்.
நன்றி சகாதேவன்

goma said...

ஆஹா.. கீதாம்மா. ஆனைக்கும் அடி சறுக்கிடுச்சே :-)))

எஸ்கலேட்டர் இருக்கற மால்ல மட்டுந்தான் ஷாப்பிங் பிடிக்காதா :-))
அமைதிச்சாரல்
சும்மாவே சுத்தம்...இனிமேல் கீதாம்மா ஷாப்பிங் என்றாலே காத தூரம் ஓடப்போகிறார்.பாவம்

goma said...

அம்பாளடியாள்
உங்கள் வலைப்பூ வாசித்தேன் நான் அங்கே வந்து சிரிச்சது கேட்டுச்சா கேட்டுச்சா

goma said...

ஆஹா
என் வலைப்பூவைத் திறந்ததும் கெண்டகி பொட்டடோ ஃப்ரைஸ் வாசம் அடிச்சா நிச்சயம் சொல்லி விடலாம் சித்ரா வந்தாச்சு என்பதை....
சித்ரா இனிமேல் விடுப்பு துடுப்பு எல்லாம் கிடையாது ட்யூட்டியில் ஐக்கியம் ஆகலாம்

ரசிகன் said...

சிறு சிறு விஷயங்கள் என்றாலும் மிகவும் ரசிக்கும் படியான பதில்கள்:)

goma said...

ரசிகன்
பலநாட்கள் கழித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்

திவா said...

போட்ட பின்னூட்டத்தில லிங்க் காணாம போச்சு! காக்கா ஓச்!
http://kathaikathaiyaam.blogspot.com/2011/08/blog-post.html

அப்பாதுரை said...

ரசித்தேன்.
பயப்படும் மூன்று விஷயங்கள்... ம்ம்ம்.. மூன்றையும் சேர்த்து திகில் கதை எழுதலாம் போலிருக்கே?