Saturday, 20 August 2011

இடுக்கண் வருங்கால் நகுக ஹ ஹ

என்ன ஆச்சு ?
ஒரே தலைவலி...
டாக்டரைப் பார்த்தியா ?
பார்த்தேனே,தலைவலிக்கு முதல்ல கண்ணை டெஸ்ட் பண்ணனும்னு சொன்னாங்க ..
கண் டாக்டர்ன்னா நம்ம கண்ணப்பன்தான் பெஸ்ட்,அவரைப் போய் பாரேன்..அல்லது  EYEயப்பன் கூட நல்ல டாக்டர்தான்..
இல்லை ,ஏற்கனவே நான் ,எங்க காலனி பக்கதிலே ,EYEயர்  இருக்கார் அவரைப் போய் பார்த்தேன்..
என்ன சொன்னார் கண்ணிலெல்லாம் ஒரு ப்ராப்ளாமும் இல்லை சைனஸ் இருக்கலாம் எதுக்கும் ஈ.என்.டி .யைப் பாருங்களேன்னு சொன்னார்..
ஈஎன் டி ன்னதும்  நம்ம தொண்டமான் ஞாபகத்துக்கு வரார் அவர்தான் சரியான ஆள்...அல்லது டாகடர்  மூக்கன் ..அவரும் ஓகே..
நான் நம்ம சகலரோட தங்கச்சி காதம்பரியைப் பார்த்தேன்...
காது மூக்கு தொண்டை எல்லாமே நார்மல்...எதுக்கும் பல் டாக்டரைப் பார்த்தா நல்லது...எல்லா பிராப்ளத்துக்கும் பல்லும் ஒரு காரணமாம்...
யாரைப் பார்த்தே...
வேற யாரு நம்ம பல்லவந்தான்....கொஞ்சம் க்ளீனிங் பண்ணினார் ஒரு கேவிட்டி அடைச்சார் ....மத்தபடி பிரச்சனை இல்லை
எல்லாமே நார்மல்ன்னா தலைவலிக்கு என்னதான்  காரணமாம்.
.வயசாச்சா ஹார்ட் செக் பண்ணிடலாம்னு கார்டியாலஜிஸ்டைப் பார்த்தேன்
யாரு நம்ம இருதயராஜ்தானே ?என்ன சொன்னார்?
அடைப்பு கிடைப்பு இருக்குன்னு சொல்வாரோன்னு பயந்தேன் அதெல்லாம் ஒண்ணுமில்லை ..துடிப்புதான் கொஞ்சம் அதிகமா இருக்கு ..எதுக்கும் பல்மனாலஜிஸ்ட்டைப் பாருங்கன்னார்...
அதான் பல் டாக்டரைப் பார்த்தாச்சே..அவர்கிட்டே சொன்னியா?
நீ வேற ...பல்மனாலஜிஸ்ட்ன்னா நுரையீரல் டாக்டர் ...
என்னதான்  பேர் வைக்கிறாங்களோ ...யாருக்கு புரியுது...கார்டியாலஜிஸ்ட்ன்னா கார் ரிபேர் பண்ற மெக்கானிக் மாதிரி நினைச்சேன்...சரி விடு  பார்த்தியா யாரு டாக்டர்?
LUNGகேஸ்வரன்தான் ரொம்ப ஃபேமஸ் ...பார்த்தார் எண்டோஸ்கோப்,பிராங்கோஸ்கோப்.சி டி ஸ்கேன்,ஏழெட்டு எக்ஸ்ரே ,நாலஞ்சு பிளட் டெஸ்ட்ன்னு பார்த்துட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்
இனிமேல் கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மாத்திரைகளை முழுங்கிட்டு இருக்க வேண்டியதுதான்..
என்னவோ போ...எப்படியோ குணமானா சரி...வரட்டா.எல்லாம் நல்லா குணமாகும்
[சகாதேவன் உபயம்]
எல்லாத்துக்கும் மேலே நம்ம வைத்தீஸ்வரர்  இருக்கார் .அவர்தான் நல்ல டாக்டர்,அவர் பார்த்துப்பார்   அவர் கையிலே நம்ம டாக்டர்ஸ் எல்லாருமே டூல்ஸ்தான் .

21 comments:

மதுரை சரவணன் said...

nalla vanthirukku... vaalththukkal

NIZAMUDEEN said...

Oho...ho...ho...ho...ho...ho...

திவா said...

ஹிஹிஹிஹி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹ ... ஹ... ஹ ....

Lakshmi said...

நல்ல சிரிக்கவச்சீங்க. என்ன
பெயர் பொருத்தங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

இங்கே ரொம்ப உசரமான மலை என்கிட்டாவது இருக்கா சொல்லுங்க போயி தற்கொலை பண்ண வச்சிர்றேன் எல்லா பதிவர்களையும் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு மனுஷனை கொல்லனும்னா ஒரே போடா போட்டு கொன்னுரனும், இப்பிடி நொந்து பெடேலேடுத்து, பேதலிக்க வச்சி கொல்றது நம்ம நேர்மை, கருமை, எருமைக்கு எதுரானது யுவர் ஹானர்....

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப சிரிச்சிட்டேன் உடனே சீக்கிரமா வயித்துவலி மாத்திரை அனுப்புங்க ஹே ஹே ஹே ஹே....

அஹ்ஸன் said...

ஹா ஹா ஹா டெஸ்ட் கு டாக்டர்ஸ் எல்லாரும் நால்லா பொருந்துதுங்க ..

அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஹாஸ்யம்.... பெயர் பொருத்தங்கள் நன்று....

ரசிகன் said...

ஹா..ஹா.. கலக்கல்:)

சகாதேவன் said...

அப்போ வைத்தீஸ்வரன் நல்ல வைத்தியர்தானே

சகாதேவன்

goma said...

சகாதேவனே
சரியான சமயத்தில் ஞாபகப்படுத்தினீர்.என் தோழியின் கணவர் வைத்தியநாதன் ,அவரை மறந்தே போனேன் அவர் ஒரு மயக்குனர் ,அதாவது அனஸ்திஸ்ட்...[பொறிதுயில் ஆழ்த்துனர் நம்ம தேவா மாதிரி]

goma said...

ரசிகன்
ஹா ஹா வுக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

இப்ப சரியாயிடிச்சா தலவலி ... :P

நிறைய பேரை கொண்டு வந்திருக்கீங்க

நல்லாயிருக்கு ...

goma said...

நட்புடன் ஜமால்
நன்றி

thanigai said...

yes madam. thani .good sense of comedy to relief from our stress.I will try to make my visit frequently to your hasya site. vanakkam. to get refresh

thanigai said...

nice site. I will try to make my consecutive visits.

SR said...

நகைச்சுவையாக எழுதுவது மிகவும் கடினம்.உங்களுக்கு இலகுவாக வருகிறது
ரசித்தேன்.வாழ்த்துக்கள்.கதை,கட்டுரைக்கு என் தளத்திற்கு வருகை புரியுங்கள்.
http://suvaikkasuvaikka.blogspot.com/

goma said...

தணிகை அடிக்கடி வாருங்கள்

goma said...

எஸ் ஆர்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி