மன்னா! எதற்காக இப்படி ஆராய்ச்சிமணி பக்கம் காத்திருக்கிறீர்கள்...?
ராணியார்,தேரோட்டிச் சென்றிருக்கிறார் என்றீரே.. ஏதோஒரு .பசுமாடு ,தன் கன்றை இழந்து வந்து மணி அடிக்காதா ,அதற்கு நீதி தரமாட்டோமா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.
[இவை அனைத்தும், விகடன்,தினமலர் குமுதம் என்று அனுப்பிவைக்கப் பட்ட ஜோக்ஸ்.பலமாதங்கள் காத்திருப்பதைவிட பதிவர்களை சிரிக்க வைக்கலாமே என்று பதிவிட்டேன்]
ராணியார்,தேரோட்டிச் சென்றிருக்கிறார் என்றீரே.. ஏதோஒரு .பசுமாடு ,தன் கன்றை இழந்து வந்து மணி அடிக்காதா ,அதற்கு நீதி தரமாட்டோமா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அரண்மனைக்குத் தேவையான பின்கள் வாங்க வேண்டுமென்றால் ராணியார்,அரசரைத்தான்அனுப்பிவைப்பார்...
ஏன் அப்படி ?
அவர்தானே' பின்வாங்றதில்' கில்லாடி.......
ஒவ்வொருமுறை போருக்குப் போகும் போதும் அரசர் ஏன் ராணியையும் அழைத்துச் செல்கிறார்
போரில் வெற்றி பெற்றால் ,’60 கேஜி அரசி ’இலவசம் என்று சொல்லி தப்பிக்கலாமா என்று பார்க்கத்தான்
அரசர் ஏன் நடுங்கிக் கொண்டே சாப்பாட்டு மணையில் அமர்கிறார்
இன்று ,சேனை’க்கிழங்கு பொரியல்
அரண்மனைத்தோட்டத்தில் அரசர் ஏன் இப்படி ரிவர்சில் ஓடிப்பழகிக்கொண்டிருக்கிறார்?
போரிலிருந்து ஓடிவரும்போது யாரும் புறமுதுகிட்டு ஓடி வந்தார் என்று சொல்ல மாட்டார்கள் பாருங்கள்.
மன்னர் ஏன் அரண்டு போயிருக்கிறார்?
நேற்று ராஜகுரு கோபத்தில் ,
"இப்படியே நீ புறமுதுகிட்டு ஓடி வந்தாயானால் ,அடுத்த ஜன்மத்தில் நீ ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்துனராக அமையக் கடவாய்", என்று சபித்து விட்டார்.
"இப்படியே நீ புறமுதுகிட்டு ஓடி வந்தாயானால் ,அடுத்த ஜன்மத்தில் நீ ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்துனராக அமையக் கடவாய்", என்று சபித்து விட்டார்.
[இவை அனைத்தும், விகடன்,தினமலர் குமுதம் என்று அனுப்பிவைக்கப் பட்ட ஜோக்ஸ்.பலமாதங்கள் காத்திருப்பதைவிட பதிவர்களை சிரிக்க வைக்கலாமே என்று பதிவிட்டேன்]
9 comments:
மன்னர் ஏன் அரண்டு போயிருக்கிறார்?
நேற்று ராஜகுரு கோபத்தில் ,இப்படியே நீ புறமுதுகிட்டு ஓடி வந்தாயானால் ,அடுத்த ஜன்மத்தில் நீ ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்துனராக அமையக் கடவாய் என்று சபித்து விட்டார்./
மிக அருமையான நகைச்சுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ஹா...ஹா...ஹா....
எது எப்படியோ நிறைய ராஜா, ராணி ஜோக்ஸ் போட்டு எங்கள சிரிக்க வச்சுட்டீங்க...
ஜூப்பரு கோமாக்கா..
60 கே.ஜி அரிசி, செம வெயிட்டு:-))))))
[இவை அனைத்தும், விகடன்,தினமலர் குமுதம் என்று அனுப்பிவைக்கப் பட்ட ஜோக்ஸ்.பலமாதங்கள் காத்திருப்பதைவிட பதிவர்களை சிரிக்க வைக்கலாமே என்று பதிவிட்டேன்]//
ஹி ஹி முன்னமே பதிவுல போட்டுருந்தா அப்பமே சிரிச்சிருப்போமே...
மன்னா! எதற்காக இப்படி ஆராய்ச்சிமணி பக்கம் காத்திருக்கிறீர்கள்...?
ராணியார்,தேரோட்டிச் சென்றிருக்கிறார் என்றீரே.. ஏதோஒரு .பசுமாடு ,தன் கன்றை இழந்து வந்து மணி அடிக்காதா ,அதற்கு நீதி தரமாட்டோமா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
ம்ஹும் ஒரு மன்னனுக்கே இந்த நிலைன்னா, சாதாரனப்பட்டவனின் நிலை அவ்வ்வ்வ்வ்வ்....
சேனை'கிழங்குக்கே இம்புட்டு பயமா ஹைய்யோ ஹைய்யோ முடியலை...
அருமையான நகைச்சுவைத் துணுக்குகள்
மனம்விட்டு சிரிக்க வைத்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நகைச்சுவை ததும்பும் பகிர்வு. நல்லாருக்கு.
அனைத்துமே அருமை...
Post a Comment