மந்திரி செல்லதுரை தன் செல்ல மகளின் தலைத் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.கடந்த ஆண்டு தீபாவளி கட்நது, வந்த , அடுத்து முகூர்த்தத்தில் திருமணம் நடந்ததால், தன் மகளின் தலைதீபாவளியை ,செல்லபாண்டியன் ஒரு வருடமாகக் காத்திருந்து கொண்டாடுகிறார்.
மேலும் மகள் மூன்று மாத கர்ப்பிணி வேறு,பிறகு கோலாகலத்துக்குக் கேட்பானேன்.
மருமகன் ஒரு பூச்சி ,[அதாவது அப்பாவி]மாமனாருடைய உபசாரங்களையும் விருந்தோம்பலிலும் சிக்கித் தவித்து திணறிக்கொண்டிருந்தார்.
ஒரு வண்டி பட்சணம் ,உண்டியலில் காசும் பணமும் திணிப்பது போல் திணிக்கப்பட்டு,அவருக்கு ஒவ்வாத பட்டாசுகள் ஆயிரம்வாலா சரவெடி எல்லாம் கொழுத்த வைக்கப்பட்டு அல்லோகலப் பட்டுப்போனார்.
ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு மணி பத்தாகியது.
அப்பாடா தப்பித்தோம் என்று நழுவப்பார்த்த மருமகனை ,”மாப்பிள்ளை எங்கே போறீங்க ,இனிமேதான் இருக்கு வேடிக்கை,ராக்கெட்,பாரசூட் அது இதுன்னு ஏகப்பட்ட ஐட்டம் எல்லாம் இருக்கே...அதையெல்லாம் யார் வெடிக்றது....”
“மாமா ,மணி பத்தாச்சு இதுக்கு மேலே வெடிச்சத்தம் கூடாதுன்னு சொல்லிட்டு நீங்களே ...”
“நீங்க வேற ,அதெல்லாம் நமக்கில்லை....மாப்பிள்ளை...தலை தீபாவளியும் அதுவுமா ...கப் சிப்னு யாராவது அடங்கிக் கிடப்பாங்களா??நீங்க வாங்க எவன் கேக்றான்னு நானும் பாக்றேன்....”
மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டே, பேருக்கு ரெண்டு வெடியை வெடித்துவிட்டு ஒரே ஓட்டமாகப் படுக்கச் சென்று விட்டான்
.மாமனாரும் திருப்தியுடன் உறங்கச் சென்றார்.
மறுவாரம் மகளும் மருமகனும் ஊர் திரும்பினர்.
காலம் ஒரே எட்டில் அடுத்த தீபாவளியைக் கொண்டு வந்து நிறுத்தியது.
தாத்தா செல்லதுரை தன் மடியில் பேரனை வைத்துக் கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தார்.
ஏசி அறையில் ஒலிபுகாத அறையில் பேரனைப் பத்திரமாக உறங்க வைத்துக் கொண்டிருந்தார்.பகல் நேரமெல்லாம் சமாளித்தவர் ,மாலையில் பட்டாசுகளின் ஓசை வீட்டுக்குள் தங்குதடையின்றி நுழையத் துவங்கியபோது திணறிப்போனார்.
.இந்த கொண்டாட்டம் இரவு பத்து மணியைத் தாண்டியும் ஓடிக்கொண்டிருந்ததைக்கண்ட செல்லதுரை,”யார்ப்பா அது வாட்ச்மேன்...மணி பத்தாச்சு வெடி போடக்கூடாதுன்னு ரூல் இருக்றது தெரியாம யார்டா அங்கே ...”
ஐயா ரெண்டாவது வீட்டிலே நம்ம கண்ணன் ஐயா வீட்டிலே பொண்ணுக்குத் தலை தீபாவளியாம்....”

”...அதுக்கு ...இப்படித்தான் விடிய விடிய வெடிப்பாங்களா..?.உடனே நிறுத்தச் சொல்லு...இல்லேன்னா என்ன செய்வேன்னு தெரியாது...குழந்தை பதறி பதறி முழிக்குது ....தூக்கம் இல்லாம ஒரே அழுகை.....10 மணிக்கு மேலே வெடி கூடாதுன்னு போய் சொல்லு போ...”
”தௌசண்ட்வாலாவை விட இந்த ’ரெட்டை வாலா நாக்கு ’ரொம்ப பயங்கரமா வெடிக்குதே...என்றவாறு ,மாப்பிள்ளை ரகு தன் மனைவியைச் சீண்டினான்.அவளும் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டு குழ்ந்தையோடு நழுவினாள்
[படங்கள் உபயம் பட்டாசு.காம்]

20 comments:
நல்ல கருத்துள்ள சிறுகதை....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
அருமையான பதிவு.
மனப்பூர்வ தீபாவளி வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
மனப்பூர்வ தீபாவளி வாழ்த்துக்கள்.
கதை ரசிக்கும்படியுள்ளது.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெங்கட் நாகராஜ் said...
நல்ல கருத்துள்ள சிறுகதை....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....
Blogger Rathnavel said...
அருமையான பதிவு.
மனப்பூர்வ தீபாவளி வாழ்த்துக்கள்.
Blogger asiya omar said...
கதை ரசிக்கும்படியுள்ளது.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ha,ha,ha,ha,ha,ha.... good one.
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
டைமிங்கான சிறுகதை அம்மையாரே...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்
Philosophy Prabhakaran said...
டைமிங்கான சிறுகதை அம்மையாரே..
நன்றி பெரியவரே!
அய்ய்ய்...
சூப்பர் சிறுகதை...
பிறர்க்கென்று வரும்போது கவலைப்படாமல் இருத்தலும், தனக்கென்று வரும்போது கதறி அழுதலும், இன்றைய அரசியல்வியாதியை அப்படியே படம் பிடித்து காட்டியது...
இன்னமும் எழுதுங்கள்....
அருமை
நல்ல சிறுகதை
தீபாவளி வாழ்த்துகள்
இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்
நன்றி அவர்கள் உண்மைகள்.
உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
இன்னமும் எழுதுங்கள்....எழுதுகிறேன் ஆர்.கோபி.
மாட்டேன் என்றால் கோபி’த்துக்கொள்ளப்போகிறீர்கள்
என் ராஜபாட்டை ராஜா
இலவச வெடிக்கடைக்குச்சென்றேன் கொஞ்சம் என் சரக்கும்[வெடிதான்]விற்பனைக்கு கொடுத்து வந்தேன்
T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை
நன்றிங்கோ
தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...
அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!
தனக்கு தனக்கென்று வரும்போது தனி நியாயம்தான். பகிர்வு அருமை. தீபாவளி குதூகலமாகக் கழிந்ததா,சகோ?
Post a Comment