Tuesday, 17 January 2012

செந்திலின் சந்தேகங்கள்

அண்ணே அண்ணே ஒரே ஒரு நிமிஷம் நில்லுங்கண்ணே,ஒரு மீட்டர் வாங்கிட்டு வந்துடுறேன்...
ஒரு மீட்டர் என்னடா  வாங்கப் போறே?
ரிப்பன் ண்ணே
இங்கே எங்கேடா ரிப்பன் கிடைக்கும்?
அதோ பாருங்கண்ணே ரிப்பன் பில்டிங்
.டேய் காஞ்ச மண்டை அது ரிப்பன் பிரபு பில்டிங்..
பிரபுவுக்கு எதுக்குண்ணே ரிப்பன்..அவர் பெரிய ரிப்பன் வியாபாரியாண்ணே
டேய் வேண்டாம் உதை படாதே.
--------------------------------------------
சரிண்ணே ரிப்பனை விடுங்கண்ணே ..ஒரு ’தம் ’வாங்கிட்டு வரவாவது விடுங்கண்ணே..
என்னது தம்மா?!!!!!!!
ஆமாண்ணே அங்கே பாருங்க சார்மினார் ஃபேக்டரி..
ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துடுறேன்..விடுங்கண்ணே உங்களுக்கு வேணும்னாலும் வாங்கிட்டு வந்து ஒழுங்கா தரேன்
டேய் டேய் என் கோபத்தைக் கிண்டாதே
அது தொழுகை பண்ற இடம்டா....
அது என்ன சார் மினார்
டேய் காலி தலையா...சார்ன்னா நாலு ...மினார்ன்னா தூண் ,அதான் சார்மினார்.
அப்போ குதுப்ன்னா ஒண்ணா அண்ணே 
என்னடா சொல்றே குதுப்ன்னா ஒண்ணான்னு கேக்றேன்
டெல்லிலே குதுப் மினார்ன்னு இருக்கே ஒரே ஒரு தூண்தானே அப்போ ’குதுப்’னா ஒண்ணு ன்னுதானே அர்த்தம் ’ஏக்’ன்னும் சொல்லலாம் குதுப்ன்னும் சொல்லலாம் அப்படித்தானே அண்ணே...என்ன ஹிந்தியோ...
டேய் அவனைப் பிடிங்கடா ...
---------------------------------------------..
அண்ணே யார்ண்ணே இது
இதுவா ?இவங்கதான் சுதந்திரதேவி
இது என்னண்ணே சுதந்திரம்?ஒரே இடத்திலே வருஷக்கண்ணக்கா கையைத்தூக்கி ,டார்ச்சைப் பிடிச்சுட்டு கை வலிக்காது...ஒரு நாள் கூட கை மாத்த முடியாம, கால்வலி போக உக்கார முடியாம ...இது எப்படிண்ணே சுதந்திரமாகும்...போங்கண்ணே உஙளுக்கு ஒண்ணுமே தெரியாது...
யாராவது அவனைப்பிடிச்சு என் பேரைச் சொல்லி நாலு சாத்து சாத்துங்களேன்.
[புகைப்படங்கள் நெட் உபயம்]

5 comments:

Lakshmi said...

ஹா ஹா ஹா செமை சந்தேகங்கள் தான்.

வலிபோக்கன் said...

அட.ஆமாண்ணே! இங்க ஒருத்தரு இந்திய ரூபாயில பொக்க வாயால சிரிச்சுகிட்டே இருக்காருண்ணே! வாயி வலிக்காது.வாயி வலிக்கலேன்னாலும் அவரு சிரிக்கிறது எனக்கு கேடகவே மாட்டேன்குதுண்ணே?

goma said...

நன்றி லஷ்மி
செம சந்தேகங்கள் உங்களைச் செமையா சிரிக்க வச்சுதா?

goma said...

வலிப்போக்கன் நீங்க எந்த வலியானாலும் போக்கிடுவீங்களா?
எந்த வலிலே ஸ்பெஷலிஸ்ட்?இன்னைக்கு வரைக்கும் உங்களை இந்த ஏரியாவிலே பார்த்ததே இல்லையே....
பொக்கைவாய்க்காரரை நாமெல்லாம் உண்மையாகவே மனம் குளிர சிரிக்க வச்சாதான் அவர் சிரிக்கிறது உங்களுக்கு மட்டுமல்ல நாடு முழுக்கக் கேட்கும்

லிஸ்ட் போடுங்க....

அமைதிச்சாரல் said...

ஜூப்பரப்பு கோமாக்கா :-))))))