Monday, 23 January 2012

செந்திலும் ஐயனாரும்

அண்ணே பாருங்க நான் எவ்வளவு சீப்பா சாமானெல்லாம் வாங்கி வந்திருக்கேன்னு
அடே என் செல்லம் எங்கேடா கத்துக்கிட்டே
எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த லெசன்ணே
என்னமா ஜொலிக்குதுடா உன் மூளை....
சரி என்ன வாங்கினே எவ்வள்வுக்கு வாங்கினே காட்டு பாப்போம்
இதோ பாருங்க இந்த டவல், 100ன்னு சொன்னான் நான் 25.ஐயனாருக்கு வாங்கிட்டேன்
இது கைவச்ச பனியன் 70 சொல்லி 30 ஐயனாருக்கு கொடுத்தாகுடு இல்லேன்னா நீயே போட்டுக்கன்னு வீசீட்டேன்
இது 40 ஐயனார்
இந்த கண்ணாடி 67 ஐனார்
இந்த டார்ச் லைட் வெறும் 10 ஐயனார்தான்
அப்படியே காய்கறிக்கடைக்குப் போனேன்
வாழைக்காய் 2 ஐயனார்
கேரட் கிலோ 12 ஐயனார்....
ஏய் ஏய் ஸ்டாப்
இருங்கண்ணே இன்னும் பாக்கி இருக்கு,
என்ன இது? நீ வாங்கின சாமானுக்கு விலை சொல்றியா? அல்லது உங்க ஊர் ஐயனாருக்கு நேந்து விடுறியா...?
என்னடா....? என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா   எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார் ன்னு சொல்லிட்டு.......
நேத்து ஒரு சூப்பர் மார்க்கெட் போனோமா
ஆமா அங்கே எங்கேடா ஐயனார் வந்தார்...
அங்கேதாண்ணே இந்த ஐயனாரையே கண்டு பிடிச்சேன்
ஒரு குக்கரை எடுத்தேன் அதிலே 2300 ஐயனார்ன்னு விலை போட்டிருந்துச்சு...இப்படியே எதை எடுத்தாலும் ஐயனார் ஐயனார்ன்னுதாண்ணே இருந்துச்சு....நான் என்ன நினைச்சேன், இனிமே ரூபாய்ன்னு சொல்லக்கூடாது ஐயனார்ன்னுதான் சொல்லணும்னு கண்டு பிடிச்சென்...எப்படிண்ணே என் கண்டு பிடிப்பு?பாராட்டுங்கண்ணே...
அட சட்டித் தலையா
ப்ளேகிரவுண்ட் மண்டையா
குள்ளக் கொடுக்கு
எதுக்குண்ணே என்னை இப்படியேல்லாம் இன் ஜல்ட் பண்றீங்க...
டேய் அது ஐயனார் இல்லேடா....
ஐயனார் இல்லையா !!!!!!!அப்படியெல்லாம் யோசிக்காம சொல்லாதீங்க ஐயனார் கண்ணைக் குத்தப் போறார்
இப்போ நான் உன் கண்ணைக் குத்தப்போறேன்
மடையா ஐயனார்ன்னா, ஐ.என்.ஆர். அப்படீன்னா,iஇந்தியன் ரூபாய் ,அதாண்டா ,இந்தியன் நேஷனல் மணி..
என்னது இந்தியன் நேஷனல் கவுண்டமணியா
அடி செருப்பாலே
டேய் இவனை யாராவது கெட்டியா பிடிங்க ...நாலு சாத்து சாத்தாணும்...
என்னை எதுக்கு சாத்தணும் நான் என்ன கதவா......
டேய் அவனைப் பிடிங்கடா...

13 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ டாலர் சிம்பல் போட்டுருந்தா செந்தில் என்னவா சொல்லுவாராம்...?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே பாருங்க நான் எவ்வளவு சீப்பா சாமானெல்லாம் வாங்கி வந்திருக்கேன்னு//

சீப்பா வாழைப்பழம்தான் ஹிடைக்கும் இதென்னா சாமான்கள் எல்லாம் கிடைக்குது அவ்வ்வ்வவ்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டேய் இவனை யாராவது கெட்டியா பிடிங்க ...நாலு சாத்து சாத்தாணும்..//

எலேய் நல்லா கெட்டியா கட்டி வையுங்க நானும் நாலு சாத்து சாத்திட்டு கொல்லை பக்கமா விழுந்து உருண்டு ஓடிர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னை எதுக்கு சாத்தணும் நான் என்ன கதவா..//

எட்றா அந்த வீச்சறுவாளை பூட்டுறா வண்டியை எங்கேயாவது காட்டுக்குள்ளே ஓடிபோயி தப்பிச்சுறலாம்.

Lakshmi said...

ஹா ஹா பாவம்ங்க நம்ம ஐயனாரு.

goma said...

எட்றா அந்த வீச்சறுவாளை பூட்டுறா வண்டியை எங்கேயாவது காட்டுக்குள்ளே ஓடிபோயி தப்பிச்சுறலாம்

நாஞ்சிலாரே வீச்சறுவாளை வச்சுதான் வண்டியைப் பூட்டுவீங்களா?சாவி கீவி கிடையாதா?அப்ப்டியே பூட்டினாலும் பூட்டின வண்டிக்குள்ளே எப்படி ஏறுவீங்க?உங்க பாஷையிலே
வீச்சறுவாளை எடுத்து வண்டியைப்பூட்டி ,ஏறீட்டீங்கன்னு வச்சுக்குவோம்,எதுக்கு ஓடி போகணும் வண்டியிலேயே போகலாமே....
காட்டுக்குள்ளே காவலுக்கு ஐயனாரை அனுப்பவா?

FOOD NELLAI said...

ஐ.என்.ஆர். அய்யனார் ஆனது ரசிக்க வைத்தது.

FOOD NELLAI said...

நான் கதவா, சாத்துறதுக்கு? ஹா ஹா ஹா. நல்ல நகைச்சுவை.

Chitra said...

செந்தில் ஸ்டைல் ஹா,ஹா, ஹா,ஹாஸ்யம் .... நல்லா வந்து இருக்குதுங்க.

அமைதிச்சாரல் said...

செம.... அசத்தலான நகைச்சுவை கோமாக்கா :-)

goma said...

லஷ்மி அதை ஏன் கேக்றீங்க இந்த ஐயனார் ரொம்ப நாளா எனக்குள்ளே இருந்து பாடாய் படுத்தினார் இன்றுதான் அவரை வெளியில் விட்டேன்

ஃபுட் நெல்லை
இந்த கதவு கூட அந்த ஷணத்தில் வந்து அடித்தது

சித்ரா செம செந்தில்ன்னு சொல்லுங்க

சகாதேவன் said...

உங்கள் ஹாஸ்யத்திற்கு
ஆயிரம் ஐயனார் பரிசு தர ஆசை.
அதான் ஐயனாரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்
சகாதேவன்

goma said...

சகாதேவன்
நான்தான் ஐனார் பேசுகிறேன்
உன் வேண்டுதல் என் செவியில் விழுந்தது.
1000 ஐயனார் அனுப்பியிருக்கிறேன் .
கோமாவுக்கு அனுப்பி வைக்கவும்